2022 ஆம் ஆண்டில் மாணவர்களின் வரவு இடாப்பு பதிதல் தொடர்பான விசேட அறிவித்தல்

.

2021 கல்வியாண்டின் சில மாதங்கள் 2022 ஆம் ஆண்டில் நடைபெறுவதால், பாடசாலைகளின் நாளாந்த வரவு பதிதல் தொடர்பில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளமை பற்றி  அமைச்சுக்கு அறியக்கிடைத்துள்ளது. எனவே அது தொடர்பில் பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்.

அரச பாடசாலைகள், அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகள் மற்றும் பிரிவெனாக்கள் 2021 கல்வியாண்டுக்காக ஆரம்பிக்கப்பட்ட மேற்படி ஆவணம் அந்த கல்வியாண்டு 2022 வருட நிறைவுறும் தினத்தன்று அதாவது, சிங்கள, தமிழ் பாடசாலைகளுக்கு 2022.04.08 திகதியும்  முஸ்லிம் பாடசாலைகளுக்கு 2022.04.01 வரையும் கொண்டு செல்லப்படல் வேண்டும்.

அதனடிப்படையில் 2022 கல்வியாண்டு ஆரம்பிக்கும் தினத்தில் இருந்து புதிய வரவு இடாப்பு ஆரம்பிக்கப்பட்டு, அவ்வாண்டு நிறைவுறும் தினம் வரை கொண்டு செல்லப்படல் வேண்டும்.

மேற்படி நடைமுறைப்படுத்தப்படும் போது , பிரயோக ரீதியான பிரச்சினைகள் ஏற்படும் சந்தரப்பத்தில் , அது தொடர்பாக வலயக் கல்விப் பணிப்பாளரை தொடர்பு கொண்டு உரிய தீர்மானங்களை எடுத்து நடைமுறைப்படுத்த முடியும்

செயலாளர்
கல்வி அமைச்சு



Post a Comment

Previous Post Next Post

JSON Variables

World News

نموذج الاتصال